பாதிக்கப்பட்டுள்ள டாக்கியுமன்ட்(document) கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files),,


பாதிக்கப்பட்டுள்ள மைரோசாப்ட் வேர்டு , எக்ஸல் , பவர்பாயிண்ட் கோப்புகளை பாதுகாப்பாக Text கோப்புகளாக மாற்றி மீட்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
 
சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகள் எதாவது பிரச்சினை காரணமாக திறக்காமல் இருக்கும் இப்படி இருக்கும் கோபுகளில் இருக்கும் தகவல்களை நமக்கு எளிதாக மீட்டு கொடுப்பதற்காக ஒரு  இலவச மென்பொருள் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Download Link என்று கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கி மென்பொருளை நம் கணினியில் எளிதாக தறவிரக்கலாம். தறவிரக்கிய மென்பொருளை நம் கணினியில் நிறுவி இயக்கியதும் File என்பதை சொடுக்கி Open என்பதை தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்டுள்ள கோப்பை தேர்ந்தெடுக்கவும் உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள கோப்புகளில் உள்ள Content  நமக்கு Text

Content -ஆக Recover செய்து மாற்றி கொடுக்கப்படும். doc, docx, xls, xlsx, ppt, pptx, odt, ods, and odp போன்ற ஃபார்மட்களுக்கு துணைபுரியும் வண்ணம் இந்த இலவச மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு சரியாக தெரியாமல் இருக்கும் ஆபிஸ் கோப்புகளை திறப்பதற்கு இந்த மென்பொருள் உபயோகம் உள்ளதாக இருக்கும்.
 
தறவிரக்க முகவரி:இதோ 
 
பாதிக்கப்பட்டுள்ள டாக்கியுமன்ட்(document) கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files),, பாதிக்கப்பட்டுள்ள டாக்கியுமன்ட்(document) கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files),, Reviewed by ANBUTHIL on 4:07 PM Rating: 5
Powered by Blogger.