குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையங்கள்

இணையம் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன.
1. Kidsmart: லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விடயங்களை கற்றுத்தருகிறது. அரட்டை, சமூக இணைய தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விடயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.
2. Yahoo Kids: குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொது அறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.
3. Ask Kids: முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.
4. National Geographic Kids: அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society (National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்).
குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விடயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம்.
5. Kids Health: மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.
KIDS HEALTH                                                                                      
குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையங்கள் Reviewed by ANBUTHIL on 4:20 PM Rating: 5
Powered by Blogger.