Responsive Ad

பிரவுசர்களுக்கான ஷார்ட்கட் கீகள்

இணையத்தில் மணிக்கணக்கில் உலா வருகையில், மவுஸைப் பிடித்து இயக்குகையில், வலது மணிக்கட்டில் வலி ஏற்படலாம்.  அப்போது நம்மில் பலர், ஷார்ட்கட் கீகளை நாடுவோம். நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளுக்கும், இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவோம்.
குரோம் பிரவுசருக்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள்   குரோம் தளத்திலேயே பெற விரும்புபவர்கள்,  http://www. google.com/support/chrome/bin/static.py?page=guide.cs&guide=25799&topic=28650 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.  மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான சில முக்கிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளை இங்கு காணலாம். இவை பயர்பாக்ஸ் தொகுப்பு 3 மற்றும் பின்னர் வந்த தொகுப்புகளிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 மற்றும் 8 களிலும் பயன்படுத்தலாம்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: 
லேப்டாப் கம்ப்யூட்டரை பயணத்தின் போது பயன் படுத்துகிறீர்களா? குறிப்பாக ட்ரெயினில் செல்கையில் பலரும் தங்கள் தூங்கும் பலகைகளில் சாய்ந்தவாறும், அல்லது பகல்நேர தூர வண்டிகளில், இருக்கையில் அமர்ந்த வாறே பயன்படுத்துவதனைப் பார்த்திருக் கிறேன். அப்போது மவுஸ் பயன்படுத்த வேண்டும் என்றால் அடுத்தவருக்கு இடையூறு தரும் வகையில் தான் பயன்படுத்த முடியும். எனவே மவுஸினைப் பயன்படுத்த மாட்டோம். ஆனால் இணைய தளங்களில், டெக்ஸ்ட் காப்பி செய்து பேஸ்ட் செய்திட சற்று சிரமமாக இருக்கும். இங்கு தான் கேரட் பிரவுசிங் (Caret Browsing)  என்பது உதவுகிறது.  இதனை மேற்கொள்ள, எப்7 கீயினை அழுத்த வேண்டும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில், கேரட் பிரவுசிங் வேண்டுமா என்ற கேள்வி காட்டப்படும். இதற்கு ஆம் எனப் பதில் அளித்தால், கேரட் அடையாளத்துடன் கர்சர் கிடைக்கும். இதன் மூலம் டெக்ஸ்ட்டினை எளிதாகத் தேர்ந்தெடுக்கவும், ஒட்டவும் முடியும். டேப், ஹோம், பேஜ் அப் போன்ற கீகளையும் பயன்படுத்தலாம். இது பயர்பாக்ஸ் பிரவுசரிலும் செயல்படும். ஆனால் குரோம் பிரவுசரில் செயல்படாது.
2. இணைய தளத்தின் டெக்ஸ்ட் அளவை அதிகப்படுத்தவும், சிறிதாக்கவும் ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். கண்ட்ரோல் + ப்ளஸ் கீ அழுத்தினால், டெக்ஸ்ட் பெரிதாகும். கண்ட்ரோல் + மைனஸ் கீ அழுத்தினால், டெக்ஸ்ட் சிறிதாகும். வழக்கமான இணைய தளம் தரும் அளவில் டெக்ஸ்ட் இருக்க வேண்டும் என்றால், கண்ட்ரோல் + பூஜ்யம் அழுத்த வேண்டும்.
3. இணையத்தில் பல வகை தேடுதல் இஞ்சின் களைப் பயன்படுத்தலாம். கண்ட்ரோல் + E  அழுத்த  சர்ச் இஞ்சின் கிடைக்கும். பின்னர், கண்ட்ரோல் + கீழ் அம்புக்குறி அழுத்த, தேடல் இஞ்சின்களின் பட்டியலைப் பெறலாம்.
4. ஒவ்வொரு டேப்பில் இருக்கும் தளத்தின் குறுகிய படம் (குரோம் பிரவுசரில் கிடைப்பதைப் போல)கிடைக்க வேண்டுமா? கண்ட்ரோல் + க்யூ கீ அழுத்தவும். ( இந்த வசதி முதலில் சபாரி பிரவுசரில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று முன்பு வாசகர் ஒருவர் எழுதி இருந்தார். பிரவுசரில் வசதிகளைத் தருவதில் எந்த அளவிற்குப் போட்டி உள்ளது என்று இதன் மூலம் தெரிகிறது) 
5. முன்னணியில் புதிய டேப் ஒன்றைத் திறக்க Ctrl + T  அழுத்தவும். 
6.டேப்களுக்கிடையே செல்ல  CTRL+TAB அல்லது    CTRL+SHIFT+TAB      அழுத்தலாம். 
7. அப்போதைய டேப் அல்லது விண்டோவினை மூட  Ctrl + W
8. முன்னணியில் அட்ரஸ் பாரிலிருந்து புதிய டேப் திறக்க Alt+ Enter
9. குறிப்பிட்ட டேப்பிற்குச் செல்ல Ctrl+ N (இங்கு N என்பது டேப்களில் எத்தனாவது டேப் என்ற எண்ணைக் குறிக்கிறது. அது 1 முதல் 8 வரையில் இருக்கலாம்.)
10. இறுதி டேப்பிற்குச் செல்ல Ctrl+ 9.
11. மற்ற டேப்களை மூட Ctrl+ Alt+F4. 
2. பயர்பாக்ஸ் பிரவுசரில்:
1. உங்களுடைய பிரவுசர் ஏற்கனவே பார்த்த தளங்களுக்கு, பழைய கேஷ் மெமரியில் உள்ள தள தகவல்களைத் தருகிறதா? இதற்கும் மேலாக, இன்றைய தகவல்களைத் தர வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் அழுத்த வேண்டிய ஷார்ட்கட் கீகள் Ctrl +Win+F5. 
2. கர்சரை அட்ரஸ் பாருக்கு இழுக்க  Alt + D.
3.சர்ச் பாருக்கு கர்சரை இழுக்க Ctrl +Win+K. 
4.இணையப் பக்கத்தில் டெக்ஸ்ட் ஒன்றைக் கண்டறிய / டைப் செய்து, எந்த சொல்லைத் தேடுகிறீர்களோ, அதனை டைப் செய்திடவும். நேரடியாக அது தேடும் கட்டத்திற்கு இழுத்துச் செல்லும்.
5. உங்களுடைய ஹோம் இணையப் பக்கத்தினை புதிய டேப்பில் திறக்க  வேண்டுமா? Alt+Home  கீகளை அழுத்தவும்.
6. ஓர் இணையப் பக்கம் பின்னால் செல்ல வேண்டுமா? பேக் ஸ்பேஸ் கீயை அழுத்தவும்.
7.உங்களுடைய பிரைவேட் டேட்டாவினை முற்றிலுமாக நீக்க வேண்டுமா?  Alt+Shift+delete அழுத்தவும். (இதனை Alt+Ctrl+Delete  உடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். அவை பழைய விண்டோஸ் சிஸ்டங்களில், சிஸ்டத்தினை ரீ பூட் செய்துவிடும்.)
8. அப்போதைய விண்டோவினை முழுத் திரையில் பார்க்க வேண்டுமா? எப்11 அழுத்தவும். மீண்டும் பழையபடி காண, அதே கீயை அழுத்தவும். 
9. லிங்க்குகளுக்கிடையே தாவிச் செல்ல, டேப் கீ  அழுத்தவும். பின்பக்கமாக இவற்றிற்கிடையே செல்ல, ஷிப்ட் கீயுடன் இதனை அழுத்தவும்.
மேலே தரப்பட்டுள்ள ஷார்ட் கட் கீகளை நினைவில் வைத்துக் கொள்ள, இவற்றை அடிக்கடி பயன்படுத்துவதுதான் ஒரே வழி. முடியாதவர்கள், இவற்றை ஒரு வேர்ட் பைலில் போட்டு வைத்து, எளிதாக அணுகித் திறந்து பார்க்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.