அழித்த பைல்களைத் திரும்பப் பெற


அழித்த பைல்களை மீண்டும் எப்படி திரும்ப பெறுவது என்ற எண்ணத்துடன் இணையத்தில் உலா வந்த போது என்ற ஒரு புரோகிராம் இதற்காகவே எழுதப்பட்டு இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதாக ஒரு குறிப்பினைப் படித்தேன்.
தொடர்ந்து அதனைத் தேடிhttp://www.recuva.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.
இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.  எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.
அழித்த பைல்களைத் திரும்பப் பெற அழித்த பைல்களைத் திரும்பப் பெற Reviewed by அன்பை தேடி அன்பு on 4:56 PM Rating: 5
Powered by Blogger.