குழந்தைகள் பிறந்தது முதல் அது செய்யும் ஒவ்வொரு அழகான தருணங்களையும் ஆன்லைன் மூலம் எளிதாக இலவசமாக சேமிக்கலாம்.
புகைப்படங்களை மட்டும் சேமித்து வைத்துக்கொள்வதை விட குழந்தை செய்யும் செயலை வார்த்தைகளாகவும் சேமித்து வைக்கலாம்.
குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்கள் செய்யும் செயல்களை ஊக்குவிப்பது, அறிவை வளர்ப்பது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதையும் தாண்டி குழந்தைகள் செய்யும் சுட்டித்தனங்களை நாம் அவர்களுக்காக செய்த ஒவ்வொரு நிகழ்வையும் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்.

இத்தளத்திற்கு சென்று Join Free என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம் குழந்தைகளின் பெயர் வைக்கும் நாட்கள் முதல் அனைத்து அழகான தருணங்களை புகைப்படத்துடன் சேமிக்கலாம்.
குழந்தை பெரியவனாக வளர்ந்த பின் தன் தாய் தந்தை தன்னை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டனர் என்பதை கதையாக சொல்வதைவிட இப்படி ஒரு அழகான டிஜிட்டல் டைரியாக கொடுத்தால் என்றும் அழியாத நிகழ்வாக இருக்கும்.
இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி