நம்மிடம் இருக்கும் ஆடியோ கோப்புகளை Mp3 பிளேயர், iPod, iPhone, iPad போன்ற கருவிகளில் பாடக்கூடியவாறு எளிதாக மாற்றலாம்.
இதில் Mp3, wmv, wma, flac, aac போன்ற வடிவங்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளின் மூலம் ஆடியோ வகைகளை மாற்றுவது மட்டுமின்றி பல வீடியோ கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து இணைக்க முடியும். Merge Audio files என்பது இதன் சிறப்பான விசயமாகும்.

மேலும் பல்வேறு வகையான DVD, H.264, AVI, MPEG, MP4, MKV, DIVX, MOV, WMV, VOB, 3GP, RM, QT, FLV வீடியோ கோப்புகளிலிருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்கும் வசதியும் கொண்டிருக்கிறது.
இதிலிருந்து Mp3 கோப்புகளை iTunesக்கு அனுப்பிக் கொள்ள முடியும். ஆடியோவை சீடி/டிவிடியில் எழுதும் வசதி விரைவில் வரும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மென்பொருளின் பயனர் இடைமுகம்(User interface) பயன்படுத்த எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.