இமெயிலில் பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப


நாம் பொதுவாக மின்னஞ்சல் மூலமாக 10MBயிலும் குறைவான சிறிய கோப்புக்களையே அனுப்புவதுண்டு. அப்படி கூடுதலான அளவில் போட்டோக்களை அனுப்பவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்வேளையில் பல பகுதிகளாக அனுப்புவது வழமை.ஆனால் வீடியோ போன்ற கோப்புக்களை பல துண்டுகளாக பிரித்து அனுப்புவதென்பது சற்று கடினமானதொன்றே.
எனவே இவ்வாறான வேளையில் எமக்கு கைகொடுப்பதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது. 
                                           

இதில் நாம் இலவசமாக கோப்புக்களை நண்பர்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம்.இத் தளத்துக்கு சென்று முதலில் நீங்கள் அனுப்பவிருக்கும் கோப்புக்களை பதிவேற்ற [Upload] வேண்டும். அதன்பின் அதற்குரிய Direct Link ஐ Copy செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் போதும்.


வேண்டுமெனில் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கு மட்டுந்தான் இக் கோப்பு தெரியவேண்டுமென எண்ணின் அதற்காக கடவுச்சொல்[Password] கொடுக்கும் வசதியையும் மேற்கொள்ளக் கூடியதாய் உள்ளது.

கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அத் தளத்துக்கு செல்லவும்.

                                         http://sendtool.com/
இமெயிலில் பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப இமெயிலில் பெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப Reviewed by அன்பை தேடி அன்பு on 3:25 PM Rating: 5
Powered by Blogger.