விண்டோஸ் 8ன் Developer Preview மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு,,

இணையத்தில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தான் இந்த Windows 8 மென்பொருள். மைக்ரோசாப்ட் இந்த மென்பொருளை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இந்த மென்பொருளில் பல வசதிகள் நிறைந்து உள்ளது. சமீபத்தில் தான் Windows7 மென்பொருளை வெளியிட்டது. அது கணணி உலகில் மிகுந்த வரவேற்பை பெற்று வருவாயை அள்ளி குவித்தது. அதற்குள் மேலும் பல வசதிகளை புகுத்தி Windows 8 மென்பொருளை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

64bit, 32bit என இரண்டு வகை கணணிகளுக்கும் இந்த மென்பொருள் பொருந்துகிறது. ஆனால் தற்பொழுது இந்த மென்பொருள் Developer Preview (சோதனை பதிப்பு) ஆக தான் வெளியிட்டுள்ளது.
நீங்கள் தரவிறக்கம் செய்ததும் உங்களுக்கு .iso கோப்பு வந்திருக்கும். அதை நீங்கள் dvd கோப்பாக மாற்றம் செய்து பிறகு நிறுவ வேண்டும்.
நீங்கள் Windows 7 உபயோகித்து கொண்டிருந்தால் சுலபமாக Windows disk image burner மென்பொருளை உபயோகித்து மாற்றம் செய்து கொள்ளலாம் அல்லது நீங்கள் Vista or Xp உபயோகித்தால் இதற்க்கு பல Burning மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது.
தரவிறக்கம் செய்து உபயோகிக்கவும். மாற்றம் செய்தவுடன் வரும் கோப்பை நிறுவிக் கொள்ளுங்கள்.

                                                                               
விண்டோஸ் 8ன் Developer Preview மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு,, விண்டோஸ் 8ன் Developer Preview மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு,, Reviewed by அன்பை தேடி அன்பு on 8:53 PM Rating: 5
Powered by Blogger.