பேஸ்புக்கில் அதிரடி மாற்றம்! - அன்பைதேடி அன்பு,,,

பேஸ்புக்கில் அதிரடி மாற்றம்!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் இன்று பில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களை தன்கத்தே கொண்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதன் வரிசையில் தற்போது News Feed வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

அதாவது இவ் வசதியின் ஊடாக செய்திகளை ஷேர் செய்து நண்பர்கள், உறவினர்களுடன் பகிரக்கூடியதாக இருக்கும்.

இந்த வசதியினை பல்வேறு வியாபார நிறுவனங்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.

ஆனால் தற்போது நண்பர்கள் ஊடாக பகிரப்படும் செய்திகளை அதிகப்படுத்திக் காட்டும் அதேவேளை நிறுவனங்களின் செய்திகளை குறைத்துக்காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களின் பிணைப்பே மேம்படுத்த முடிவதுடன் புதிய பயனர்களையும் உள்வாங்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது