ரூ.6000க்கு 7 இன்ச் டேப்ளெட் அறிமுகம்.!!

குறைந்த விலையில் இண்டர்நெட் சேவைகைளை வழங்குவதில் பெயர் பெற்ற டேட்டாவின்ட் நிறுவனம் 7 இன்ச் திரை கொண்ட டேப்ளெட் கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி டேட்டாவின்ட் i3G7 டேப்ளெட் இந்தியாவில் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

டேட்டாவின்ட் i3G7 டேப்ளெட் கருவியில் இன்டெல் 64-பிட் குவாட்கோர் X3 பிராசஸர் மற்றும் வாய்ஸ் காலிங் அம்சம் சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது. மேலும் இதன் இண்டர்நெட் டெலிவரி ப்ளாட்ஃபார்ம் மூலம் 97 சதவீத இண்டர்நெட் பேண்ட்வித் குறைக்க முடியும்.

டேட்டாவின்ட் i3G7 டேப்ளெட் கணினியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருப்பதோடு வை-பை, ப்ளூடூத், மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் டேட்டாவின்ட் i3G7 டேப்ளெட் கருவியானது 3ஜி சிம் ஸ்லாட் சப்போர்ட் மற்றும் 4 மணி நேர டாக்டைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.6000க்கு 7 இன்ச் டேப்ளெட் அறிமுகம்.!! ரூ.6000க்கு 7 இன்ச் டேப்ளெட் அறிமுகம்.!! Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5