வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே உஷார்... - அன்பைதேடி அன்பு,,,

வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே உஷார்...

வாட்ஸ்ஆப் மூலம் தனி நபர் பற்றிய வங்கிக் கணக்கு எண், இமெயில் முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்களை சேகரித்து, அதனை பயன்படுத்தி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.இது குறித்த எச்சரிக்கையை தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து வருவது போன்று உங்களுக்கு ஒரு "லின்க் (link)" அனுப்பப்படும். அதனுள் சென்றால், உங்களுக்கு அந்த சலுகை தரப்படும், இந்த சலுகை கிடைக்கும் என ஆசை காட்டி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கேட்பார்கள்.

போலி இணையதளங்களை பயன்படுத்தி, உங்கள் போனில் மார்வேர் மென்பொருள் மூலம் ஊடுருவி, உங்களைப் பற்றிய தகவல்களை வைத்து மோசடி செய்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் அதிகம். உலகம் முழுவதிலும் சுமார் பல நுாறு கோடி பேர் வாட்ஸ்ஆப்., பயன்படுத்துகிறார்கள். அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களை குறிவைத்தே இந்த மோசடி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சில சமயம், பல்வேறு மொழிகளில் வாடிக்கையாளர்களிடம் பேசியும் அவர்களை கவர்ந்து, அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படுகின்றனவாம். அல்லது, ஏதாவது ஒரு தகவலை அனுப்பி, அதனை 10 நபர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது சலுகை கிடைக்கும் எனவும் பயன்பாட்டாளர்களை சூழ்ச்சி வலையில் சிக்கி வைக்கிறார்களாம்.


தற்போது மொபைல் போன்கள் மூலம் வங்கி கணக்கு அப்ளிகேஷன்களை இயக்கும் வசதி வந்து விட்டதால், வாட்ஸ்ஆப் மோசடி நபர்கள் எளிதில் உங்கள் மொபைல் போனிற்குள் ஊடுரு, உங்கள் வங்கி கணக்கில் மோசடி செய்யும் வாய்ப்பு அதிகம் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.நன்றி தினமலர்.