சரிவடைகிறது ஐபோன் விற்பனை

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. அதிலும், ஐபோன் விற்பனையில் இந்நிறுவனம் சக்கைப்போடு போட்டது. இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் 6எஸ், 6எஸ் பிளஸ் மாடல்கள், முதன்முறையாக சர்வதேச சந்தையில் அறிமுகத்துக்கு பிறகு 25 நாட்களிலேயே இந்திய சந்தையில் கடந்த அக்டோபரில் விற்பனைக்கு வந்தன. இவற்றின் விலை கடந்த மாதம் திடீரென குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த டிசம்பர் 26ம் தேதி வரை 7.48 கோடி ஐபோன் 6எஸ், 6எஸ் பிளஸ் மாடல்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த அளவில் விற்பனை 0.4 சதவீதம் சரிந்துள்ளது. வரும் மார்ச்சுடன் முடியும் காலாண்டிலும் எதிர்பார்த்த விற்பனை இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2007ல் ஐபோன் அறிமுகமான பிறகு முதன் முறையாக விற்பனையும், லாபமும் சரிவடைவதாக ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
சரிவடைகிறது ஐபோன் விற்பனை சரிவடைகிறது ஐபோன் விற்பனை Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5