குறைந்த விலையில் அறிமுகமாகும் விண்டோஸ் டேப்லட்

சீனாவைச் சேர்ந்த வன்பொருள் உற்பத்தி நிறுவனமான Chuwi தனது டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.Chuwi Vi8 Plus எனும் இந்த டேப்லட் ஆனது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன் 8 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இவை தவிர Intel Atom x5-Z8300 Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம், 4,000 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் 100 டொலர்களே பெறுமதியான இந்த டேப்லட்டில் தலா 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் தரப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் அறிமுகமாகும் விண்டோஸ் டேப்லட் குறைந்த விலையில் அறிமுகமாகும் விண்டோஸ் டேப்லட் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5