டிவிட்டரில் செய்திகளை மட்டும் பார்க்க தனி வசதி

டிவிட்டர் சமூக வலைதளம் தனது பயனர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது.அந்த வகையில், டிவிட்டர் செல்பேசி செயலியில் செய்திக்காக தனி டேப் (Tab) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நாள்தோறும், அதிகம் பேசப்படும் செய்திகள் (trending news) இந்த புதிய டேப்பில் இடம்பெறும்.

தற்போது சோதனை அடிப்படையில் ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் ’செய்தி டேப்’ மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆன்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயல்படும் டிவிட்டர் செயலிகளில் , செய்தி டேப் வழங்கப்பட உள்ளதாகவும், உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்ட செய்தியை பார்க்க விரும்பினால் தனியாக ப்ரவுசரில் திறக்காமல், டிவிட்டர் செயலியிலேயே படிக்கலாம், அதில் உள்ள படங்களையும் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை பஸ்ஃபீட் இணையதளம், உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.டிவிட்டர் சமூக வலைதளத்தை 32 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டரில் செய்திகளை மட்டும் பார்க்க தனி வசதி டிவிட்டரில் செய்திகளை மட்டும் பார்க்க தனி வசதி Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5