முக்கிய செய்திகளை தெரியப்படுத்தும் ஃபேஸ்புக் செயலி

ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களுக்கு முக்கிய செய்திகள் (breaking news) மற்றும் நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் தெரிவிக்கும் புதிய செயலியை (news notification app) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பயனர்களுக்கு முக்கிய செய்திகளை உடனுக்குடன் இரண்டு வரிகளில் தெரியப்படுத்தும் அம்சத்தை கையாண்டு வருகின்றன. மேலும் செய்தி நிறுவனங்கள் செயலிகள் வாயிலாக, முக்கிய செய்திகளை தெரியப்படுத்துகின்றன. அதாவது செய்தி நிறுவனங்களின் செயலியை தரவிறக்கம் செய்தால், முக்கிய செய்திகளை குறித்த அறிவிப்பு கிடைக்கும்.

தற்போது ஃபேஸ்புக்கும் செய்தி நிறுவனங்கள் போன்று, முக்கிய செய்திகளின் சுருக்கத்தை, உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள உதவும் புதிய செயலியை வடிவைமைத்து வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் வெகு விரைவில் இந்த செய்தி தெரியப்படுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள் பொழுதுப்போக்கை தாண்டி, பயனுள்ள பல தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. அந்த வரிசையில் ஃபேஸ்புக்கின் செய்தி தெரியப்படுத்தும் அம்சம், அறிமுகமாவதற்கு முன்பே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உலக நிகழ்வுகள், இயற்கை சீற்றங்கள், அரசியல் மாற்றங்கள், விளையாட்டு செய்திகள் என அனைத்து செய்திகளையும் ஃபேஸ்புக் வாயிலாக தெரிந்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகளை தெரியப்படுத்தும் ஃபேஸ்புக் செயலி முக்கிய செய்திகளை தெரியப்படுத்தும் ஃபேஸ்புக் செயலி Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5