Android சாதனத்தில் உள்ள Chrome, Firefox இணைய உலாவிகள் மூலமாக இணைய பக்கங்களை PDF வடிவில் சேமிப்பது எவ்வாறு?

நீங்கள் கூகுள் குரோம் அல்லது Firefox இணைய உலாவியை உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்துபவர் எனின் நீங்கள் விரும்பும் இணையப் பக்கங்களை PDF வடிவில் சேமித்துக்கொள்ள முடியும்.நீங்கள் விரும்பும் இணையப்பக்கங்களை PDF வடிவில் சேமித்துக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.
Image result for android pdf
1. நீங்கள் PDF வடிவில் சேமிக்க விரும்பும் இணைய பக்கத்தை உங்கள் Android சாதனத்தில் உள்ள Google Chrome இணைய உலாவியை பயன்படுத்தி திறந்து கொள்க.
2. பின் Google Chrome இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டுக.
3. இனி தோன்றும் சாளரத்தில் Print என்பதை சுட்டுவதன் மூலம் தோன்றும் சிறிய சாளரத்தில் Save as PDF என்பதை தெரிவு செய்து Save என்பதை சுட்டுக.
4. பின்னர் சிறிது நேரத்தின் பின் தோன்றும் இடைமுகத்தில் குறிப்பிட்ட PDF கோப்பிற்கு பெயர் ஒன்றினை இட்டு Save என்பதை அழுத்துவதன் மூலம் அதனை PDF வடிவில் சேமித்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான்.
இனி இணைய இணைப்பு இல்லாத போதும் கூட சேமிக்கப்பட்ட PDF கோப்பினை திறந்து தேவையான தகவல்களை மீட்டிப் பார்க்க முடியும்.
நீங்கள் பயன்படுத்துவது Firefox இணைய உலாவி எனின் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.
1. PDF வடிவில் சேமிக்க விரும்பும் இணைய பக்கத்தை உங்கள் Android சாதனத்தில் உள்ள Firefox இணைய உலாவியை பயன்படுத்தி திறந்து கொள்க.
2. பின்னர் Menu Button ஐ சுட்டுவதன் மூலம் திறக்கும் சாளரத்தில்உள்ள Page என்பதை சுட்டுக.
3. இனி உங்களுக்கு Save as PDF என்ற வசதி கிடைக்கும்.
4. பின் அதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட இணைய பக்கத்தை PDF வடிவில் சேமித்துக் கொள்ள முடியும்.
Android சாதனத்தில் உள்ள Chrome, Firefox இணைய உலாவிகள் மூலமாக இணைய பக்கங்களை PDF வடிவில் சேமிப்பது எவ்வாறு? Android சாதனத்தில் உள்ள Chrome, Firefox இணைய உலாவிகள் மூலமாக இணைய பக்கங்களை PDF வடிவில் சேமிப்பது எவ்வாறு? Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5