உங்கள் பிளாக்கின் அலெக்சா ரேங்க் உயர வழிகள்.

உங்களுடைய பிளாக்கின் அலெக்சா ரேங்க் உயர மிகச்சிறந்த ஐந்து வழிகள் உள்ளது.முதலில் அலெக்சா என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.அலெக்சா என்பது பிரபல Amazon.com என்ற வணிக தளத்தின் ஒரு அங்கமான கிளை வலைத்தளம் ஆகும்.

Alexa வலைத்தளமானது, இணையதளங்களை தரவரிசைப்படுத்தி காட்டும் தளமாகும். ஒரு தளத்தின் தரத்தை இந்த அலெக்சா தளத்தின் மூலம் கண்டறியலாம்.

Alexa.com தளத்தில் Home Page-ல் Discover success. என்ற தலைப்பின் கீழ் இருக்கும் பெட்டியில் உங்கள் தளத்தின் முழுமையான முகவரியை (url) உள்ளிட்டு Search பட்டனை தட்டினால் உங்களுடைய தளத்தின் தரவரிசை எத்தனை என்பதை கண்டறிய முடியும்.


அலெக்சா ரேங்கின் முக்கியத்துவம் என்ன?

சாதாரணமாக நாம் பள்ளி வகுப்பிலிருந்து Rank என்றால் என்ன என்பதை அறிந்துவைத்திருபோபம். நன்றாக படித்து, தேர்வில் அதிகம் மதிப்பெண்பெறுபவர்களே முதல் தரத்தையும், அதற்கு அடுத்து, அதற்கு அடுத்து என வரும் மாணவர்களுக்கு அடுத்தடுத்த தரமும், அதாவது இரண்டு, மூன்று என நிர்ணயிக்கப்படு வழங்கப்படும்.

அதைப்போன்றேதான், இணையத்தில் பல்வேறுப்பட்ட இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வலைத்தளங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்தி, அத்தளங்களின் தரவரிசையும் வழங்கும் தளம்தான் அலெக்சா.

அலெக்சா ரேங்கின் அடிப்படையில் உங்கள் வலைத்தளம் மதிப்பை வருகையாளர்கள், வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும். 

இந்த அலெக்சா ரேங்க்கில் முன்னணியில் இருந்தால் தனியார் நிறுவனங்கள் வழங்கும் விளம்பரங்களை நமது வலையில் வைத்து குறிப்பிட்ட அளவு சம்பாதிக்க முடியும். 

அலெக்சா தரவரிசையில் முன்னேறுவதால் வலைத்தளமானது, அதிக பார்வையாளர்களை சென்றடைகிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

அலெக்சா ரேங்கில் விரைவாக முன்னேற்றம் அடைய...

1. முதலில் அலெக்சா தளத்தின் டூல்பாரை உங்கள் பிரௌசரில் நிறுவிக்கொள்ளுங்கள். Alexa toolbar நிறுவுவதால் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.

உங்கள் தளத்தின் அலெக்சா ரேங்கை அதன் மூலம் அறிந்துகொள்ளலாம். 
மற்ற தளங்களின் அலெக்சா ரேங்கை அறிந்துகொள்ள முடியும். 

2. பிற நண்பர்கள் அலெக்சா டூல்பாரின் மூலம் உங்கள் தளத்தை அடையும்போது, உங்கள் தளத்தின் அலெக்சா தரவரிசை முன்னேற்றம் ஏற்படும்.

3. அலெக்சா தளத்தில் உங்களுடைய வலைப்பூ அல்லது வலைத்தளத்தை Registerசெய்துகொள்வதன் மூலம் விரைவில் உங்களுடைய அலெக்சா ரேங்க் அதிகரிக்கும்.

4. அலெக்சா தளத்தின் தரவரிசையைக் காட்டும் விட்ஜெட்டை உங்கள் தளத்தில் நிறுவுவதன் மூலம் உங்கள் தளத்தின் அலெக்சா ரேங்க் முன்னேறும்.

5. Link Exchange செய்வதன் மூலமும் உங்களுடைய அலெக்சா ரேங்க் அதிகரிக்கும். அதாவது உங்களுடைய தளத்தைவிட முன்னணியில் உள்ள தளங்களில் இவ்வாறு லிங்க் எக்ஸ்சேன்ஜ் செய்வதால் Alexa Rank உயரும்.
உங்கள் பிளாக்கின் அலெக்சா ரேங்க் உயர வழிகள். உங்கள் பிளாக்கின் அலெக்சா ரேங்க் உயர வழிகள். Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5