உங்கள் கணினி shutdown ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா?

பொதுவாகவே நான் அனைவரும் கணினியில் சந்திக்கும் ஒரு பிரச்னை கணினியை அனைக்கும்போது(Shutdown) அது தாமதமாக நேரமெடுத்துக்கொண்டு அணைவதுதான். சில நேரங்களில் நீங்கள் அவசரமாக வெளியில் கிளம்ப எண்ணி உங்கள் கணினியை அணைத்துவிட Shutdown செய்வீர்கள்.. அது shutdown ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

அதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்படும் டென்சன் இருக்கிறதே.. அப்பப்பா.. சொல்லமுடியாத அளவிற்கு டென்சன் ஏற்படும் இல்லையா? 

                                                 உங்கள் கணினியை shutdown ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா?
அதுபோன்ற சூழ்நிலைகள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 


இவ்வாறு கணினி அணைவதற்கு நேரம் எடுத்துக்கொள்வது ஏன் என்று பார்த்தால்.. உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்களே காரணமாக இருக்கும். 


சரி.. இந்த பிரச்னையை எப்படி சரிசெய்வது?


அதற்கு எளிய வழிமுறையைச் செய்தாலே இவ்வாறான தாமதப்படுத்துதலை நீக்க முடியும். 


இதற்கு உங்கள் கணினியில் Start==>All Programs==>Run==> செல்லுங்கள். 
அதில் regedit என தட்டச்சிட்டு enter கொடுங்கள்..


தோன்றும் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் (Registry Editor) இடது புறம் உள்ள பக்க பட்டையில் HKEY_LOCAL_MACHINE என்பதில் டபுள் கிளிக் செய்யுங்கள். 


தோன்றும் கோப்புறைகளில் சிஸ்டம் (System) என்ற கோப்புறையை கிளிக் செய்து திறந்துகொள்ளுங்கள். 


திறந்த System Folder -னுள் currentcontrolset என்ற கோப்புறை இருக்கும். இதை இப்பொழுது திறந்துகொள்ளுங்கள். 


அதனுள் இருக்கும் கண்ட்ரோல்(control) எனும் போல்டரை திறந்துகொள்ளுங்கள். இப்பொழுது வலதுபுறம் அந்த போல்டரில் உள்ள உட்பிரிவுகள் தோன்றும். அதில் வெயிட் டூ கில் சர்வீஸ் டைம் அவுட் (waittokilltimout) என்பதின் மீது Right Click செய்து மாடிஃபை(Modify) என்பதை தேர்ந்தெடுங்கள். 


இப்பொழுது தோன்றும் மெனு விண்டோவில் (Menu window) வேல்யூ டேட்டா (Value Data) என்பதில் 200(இருநூறு) என தட்டச்சிட்டு ஓ.கே(OK) கொடுத்துவிடுங்கள். 


அவ்வளவுதான்.. முடிந்தது.. இனி நீங்கள் உங்கள் கணினியை Shutdown செய்து பாருங்கள்.. இதற்கு முன்பு உள்ளதைவிட வேகமாக உங்கள் கம்ப்யூட்டர் Shutdown ஆவதை கண்கூடாக பார்ப்பீர்கள்..
உங்கள் கணினி shutdown ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா? உங்கள் கணினி shutdown ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா? Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5