AutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு

வழக்கமாக ஆட்டோ கேடில் நாம் ஒரு வரைபடத்தை உருவாக்கி சேமிக்கும் பொழுது அது DWG கோப்பாக இருக்கும். இந்த கோப்பு ஆட்டோ கேட் மென்பொருள் உள்ள கனினியில் மட்டுமே திறக்கும் படியாக இருக்கும்.சில சமயங்களில் நமது வாடிக்கையாளருக்கு ஒரு டிராயிங்கை மின் அஞ்சல் செய்யும்படி இருக்கும். அதேவேளை அவரது கணினியில் ஆட்டோ கேட் மென் பொருள் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஆட்டோ கேட் உபயோகிக்க தெரியாதவராக இருக்கலாம்.


இதற்கு நம்மில் பலர் உபயோகிக்கும் வழி, அந்த கோப்பை JPG or Tiff கோப்பாக மாற்றி அனுப்புவது. ஆனால் இந்த முறையில் மாற்றப்படும் படங்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை அத்தோடு Background colour கருப்பு நிறமாக இருப்பதால், படத்தை பார்ப்பவருக்கும் ஒரு வித சலிப்பை தட்டும் விதமாக இருக்கும். பெரிய வரைபடமாக இருந்தால் அதை Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் மிகவும் மோசமானதாக இருப்பதுடன். அதில் ஒரு Proffessional Touch இருக்காது. PDF கோப்பாக மாற்றுவதற்கும் நம்முடைய கணினியில் வசதி இருக்க வேண்டும்.


இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க..,


விண்டோசில் WMF (Windows Meta File) என்ற வடிவம், அனைத்து கணினியிலும் திறக்கக் கூடியதாகவும் (Windows Picture and Fax viewer), எவ்வளவு பெரிதாக்கினாலும் தரம் குறையாமல் இருக்கும்.


வழக்கமாக ஆட்டோ கேடில் டிராயிங் ஏரியா கருப்பு நிறமாக இருக்கும். இதை வெள்ளை நிறமாக மாற்றுவோம்.


Tools menu விற்கு சென்று Options கிளிக் செய்யவும். இதில் Display tab-ல் Colours பட்டனை கிளிக் செய்து Window Element - இன் கீழ் Model Tab Background என்று இருப்பதில் நிறத்தை Black இற்கு பதிலாக White ஐ தேர்வு செய்து கொள்ளவும். Apply&Close மற்றும் Apply பிறகு Close கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் டிராயிங் ஏரியா வெண்மையாக மாறியிருக்கும்.




                                  




இப்பொழுது Command Window வில் wmfout என்ற கட்டளையை கொடுத்து என்டர் செய்து, கோப்பின் பெயரை கொடுத்து, பிறகு டிராயிங் ஏரியாவை தேர்வு செய்து என்டர் கொடுத்தால் போதுமானது.

WMF கோப்பு ரெடி! இனி இந்த கோப்பு எல்லா கணினியிலும் ஆட்டோ கேட் துணையின்றி திறக்கும்படியாக இருக்கும்.


மேலே குறிப்பிட்ட வழியை பின்பற்றி டிராயிங் ஏரியாவின் நிறத்தை பழையபடி கருப்பாக மாற்றிவிடவும்.
AutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு AutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5