Lenovo எஸ்5000 டேப்ளட் ரூ. 10,999 விலையில்

இந்தியாவில் லெனோவோ எஸ்5000 டேப்ளட் ரூ.10,999 க்கு விற்க அந்நிறுவனம் முடிவு. டேப்ளட்டில் இருக்க வேண்டிய அனைத்து ஆப்ஷன்களுடன் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டிருப்பது இந்திய சந்தைகளில் விற்பனையாகும் மற்ற டேப்ளட்களுக்கு கடும் போட்டியாக அமையும்.

                                            
லெனோவோ எஸ்5000 சிறப்பம்சங்கள்

புதிய லெனோவோ எஸ்5000 7 இன்ச்சில் 1280*800 எஹ்டி ரெசல்யூஷனில் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் 1 மற்றும் 16 ஜிபி ராமுடன் ஆன்டிராய்டு 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் முலம் இயங்குகிறது.

கேமராவை பொருத்த வரை 5.0 மெகா பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ் ரியர் மற்றும் 1.6 மெகா பிக்சல் முன் பக்க கேமராவும் உள்ளது.

ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 802.11 பிஜிஎன் வைபை மற்றும் ப்ளூடூத் உள்ளதோடு 7.9 எம்எம் தட்டையாக 246 கிராம் எடையுடன் 3450 எம்ஏஎஹ் லி அயன் பாலிமர் பேட்டரி டேப்ளட் க்கு 8 மணி நேரம் பேக்கப் கொடுக்கின்றது.

சிம் ட்ரே இல்லாததால் வாய்ஸ் கால்களை செய்ய முடியாது என்பதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரி இருந்தாலும் கூடுதல் மெமரி பொருத்தும் வசதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Lenovo எஸ்5000 டேப்ளட் ரூ. 10,999 விலையில் Lenovo எஸ்5000 டேப்ளட் ரூ. 10,999 விலையில் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5