சில ஆண்டுகளில் பேஸ்புக்கின் ஆதிக்கம்

வளரும் நாடுகள் பேஸ்புக்கிற்காக ஏங்குகின்றன. இது தான் பேஸ்புக் சொல்லும் செய்தி. முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், ஆப்பிரிக்க நாடுகளில் தனது பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள வெளியிட்டுள்ளது. 
அதன்படி ஆப்பிரிக்காவில் தீவிர பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனாக உள்ளது. இந்த எண்ணிக்கையில் 80 சதவீதம் பேர் செல்போன் மூலம் பேஸ்புக்கை அணுகுகின்றனர் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இணைய இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு இணைய வசதி வழங்குவதற்காக பேஸ்புக் இண்டெர்நெட்.ஆர்ஜி திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. 

ஏற்கனவே பல நாடுகளில் பேஸ்புக் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக இருந்து வருகிறது. பேஸ்புக்கின் ஆதிக்கம் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உலக சமூக வலைப்பின்னல் வரைபடத்தை பார்க்க வேண்டும். சமூக ஊடக வல்லுனரான வின்சென்சோ கோசென்சா (Vincenzo Cosenza ) என்பவர் இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளார். உலக நாடுகளில் எந்த சமூக வலைப்பின்னல் முதலிடத்தில் இருக்கிறது என்பதை காண்பிக்கும் வரைபடம் இது. 

அலெக்சா உள்ளிட்ட மதிப்பீட்டு தளங்களின் விவரங்களின் அடிப்படையில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 137 நாடுகளில் 131 நாடுகளில் பேஸ்புக் தான் முன்னணி வலைப்பின்னல் சேவையாக இருக்கிறது. பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளை எல்லாம் அதன அடையாளமான நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த வரைபட்த்தை அவர் அப்டேட் செய்து வருகிறார். 

பேஸ்புக் தவிர ஐந்து சமூக வலைப்பின்னல் தளங்கள் ஏதேனும் ஒரு நாட்டில் முன்னிலை வகிக்கின்றன். 2009 ல் இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது என்றால் இப்போது பேஸ்புக்கின் ஆதிக்கத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
 
சமூக வலைப்பின்னல் வரைபடத்திற்கு: http://vincos.it/world-map-of-social-networks/
சில ஆண்டுகளில் பேஸ்புக்கின் ஆதிக்கம் சில ஆண்டுகளில் பேஸ்புக்கின் ஆதிக்கம் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5