சீனாவின் ஆப்பிள் ஸ்யோமி மொபைல்

ஸ்யோமி - கடந்த சில மாதங்களாக டெக் உலகில் அதிகம் உச்சரிக்கப்பட்ட் ஒரு மொபைல் நிறுவனத்தின் பெயர். இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த நிறுவனத்தின் மொபைல் பற்றிய பேச்சுதான். அப்படி என்னதான் இருக்கிறது இந்த ஸ்யோமியில்...

சீனத் தயாரிப்பான இந்த ஸ்யோமி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டது. எப்போதும் சீனத் தயாரிப்பு என்றால் நம்மவர்களிடையே, அது காப்பியடிக்கப்பட்ட தொழில்நுட்பம், நம்பகத்தன்மையற்றது என்ற பேச்சுகள் இருக்கும். ஆனால், இந்த மொபைல் அந்த பேச்சுகளை எல்லாம் தகர்த்துள்ளது. சீனர்களாலும் தரமான பொருட்களைத் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

எம்.ஐ.3 என்ற மாடல், இந்த நிறுவனத்தை சீனாவின் நான்காவது மிகப்பெரிய செல்பேசி தயாரிப்பு நிறுவனமாக மாற்றி இருக்கிறது. முதலில் இயங்குதள சேவை அளித்துவந்த இந்த நிறுவனம், அதில் வெற்றி கண்டபின் 2011 ஆம் ஆண்டு எம்.ஐ.1 என்னும் தனது முதல் மொபைல் சாதனத்தை வெளியிட்டது. அன்றிலிருந்து இன்று வரை லாபத்தை மட்டுமே பெற்று வருகிறது. இந்த நிறுவனத்தை சீனாவின் ஆப்பிள் என்று வருணிக்கிறார்கள்.

ஏனென்றால், ஆப்பிளும், ஸ்யோமியும் வன்பொருள் மற்றும் மென்பொருளைத் தங்கள் சொந்த நிறுவனத்திலேயே தயாரிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, ஒரு ஆண்டில் மட்டும் ஐந்து மில்லியன் டாலர்களை இந்த நிறுவனம் வருவாயாக ஈட்டியுள்ளது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், இதன் தயாரிப்புகளான ஸ்யோமி எம்.ஐ.3, ரெடிமி 1எஸ், ரெடிமி நோட் ஆகியவற்றின் சிறப்பம்சங்களைக் காண்போம்.

ஸ்யோமி எம்.ஐ.3

13,999 ரூபாய் விலையில் பிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் இந்த மொபைலுக்கு ஏகப்பட்ட கிராக்கி. வெளியிடப்பட்ட ஒரு மாதத்திலேயே 95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்திருக்கிறது இந்த போன். இதை வாங்க எப்போது இணையதளத்திற்குச் சென்றாலும் முன்பதிவு தேவைப்படுகிறது.

                                       

இதில் முதல் ஆச்சரியம் என்னவென்றால் இதன் பில்ட்-குவாலிட்டி. இந்த விலையில் இப்படி ஒரு போனை தர முடியுமா? என்று இதன் போட்டி நிறுவனங்களையும், வாடிக்கையாளர்களையும் வாய் பிளக்க வைத்துள்ளது. இதன் திரை 1080p HDயில், ஐந்து இன்ச் என்ற அளவில் துல்லியமாக உள்ளது. அடுத்தபடியாக, இதன் பிராசசர்கள் குவாட் கோர் 2.3Ghz, 2GB ரேம் மெமரி, 16GB உள் நினைவுத்திறன், 64 gb வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி, 13எம்பி கேமரா, 2எம்பி முன் கேமரா, ஆண்ட்ராய்ட் கிட்கட் இயங்குதளம், நீடித்து உழைக்கும் 3050mah பேட்டரி என அனைத்து அம்சங்களியும் ஒருங்கே கொண்டுள்ளது. இதன் போட்டி வரிசையில் மோட்டோ எக்ஸ், கூகுள் நெக்சஸ், ஆப்பிள் ஐபோன் 5சி ஆகியன உள்ளன. ஆனால், அவையனைத்தும் 25,000 ரூபாய்க்கும் மேல் விலையுடையவை.

ரெடிமி 1எஸ்

                                 

ஸ்யோமி எம்.ஐ.3ல் வெற்றி கண்டு அதன் மினியேச்சராக ரெடிமி 1எஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த ரெடிமி 1எஸ்ஸின் சிறப்பம்சங்கள், 4.7 அங்குலம் கொண்ட திரை, ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்கக் கூடியது. 1gb ரேம் மெமரி, 8gb உள் நினைவகம், கொரில்லா கிளாஸ், குவாட் கோர் 1.6Ghz பிராசாசர், 32 gb வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி, 2000mah பேட்டரி, 8 எம்பி கேமரா என பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெடிமி 1எஸ். விலை 5,999 ரூபாயாகக் குறியிடப்பட்டுள்ளது.

ரெடிமி நோட்

நடுத்தர விலைகளில் நல்ல போன்களை அறிமுகப்படுத்திவிட்டு டேப்லட் வரிசையில் கைவைக்காமல் இருப்பார்களா என்ன? ஆனால், போனாகவும், இல்லாமல் டேப் ஆகவும் இல்லாமல், PHABLET வரிசையில் ரெடிமி நோட் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதன் திரையங்குலம் 5.5 இன்ச், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் ,1gb ரேம் மெமரி, 8gb உள் நினைவகம், 13எம்பி கேமரா, 5எம்பி முன்பக்க கேமரா, ஆக்டா கோர் 1.7ghz பிராசசர், என பல சிறப்புகளைக் கொண்ட இந்த நோட் கேம் பிரியர்களுக்காகவே மாலி450 பிராசசரைக் கொண்டுள்ளது. 3200mah பேட்டரியை நீண்ட உழைப்பைத் தரும். விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் நடுத்தர மக்களைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த ஸ்யோமி, அதன் வரிசையில் இருக்கும் மோட்டரோலா, சாம்சங் மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இந்த போனால் ஆப்பிள் நிறுவனத்திற்கு பலத்த அடி விழுந்துள்ளது. இந்த செல்போனை ஆப்பிள் கில்லர் என்றும் அழைக்கின்றனர். இந்த செல்போனில் ஆப்பிள் நிறுவன போன்களில் உள்ள வசதியும் சீன தயாரிப்புகளுக்கே உள்ள விலை குறைப்பு உத்தியும் இதனை மார்க்கெட்டில் ஜாம்பவனாக காட்டுகிறது. 

இதுவரை 5 முறை விற்பனைக்கு முன்பதிவு ப்ளிப்கார்ட்டில் தொடங்கப்பட்டது. அனைத்து முறையுமே சில நிமிடங்களில் ஸ்யோமி தயாரிப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இதுவரை இணையதள மார்கெட்டான ப்ளிப்கார்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது, இனி ரீட்டெய்ல் கடைகளில் விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் ஆப்பிள் ஸ்யோமி மொபைல் சீனாவின் ஆப்பிள் ஸ்யோமி மொபைல் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5