Alexa ரேங்க் எப்படி வேலை செய்கிறது?

இணையத்தில் நாம் தினமும் நிறைய இணையதளங்களை பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் இணையதளங்கள் வந்த வண்ணம் உள்ளன. கோடிக்கணக்கான இணையதள முகவரிகள் (Domain Name) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டது.


மேலும் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு உலகிலுள்ள அனைத்து இணைய தளங்களுக்கான தர வரிசை (rank) பட்டியலை கணக்கீடும் இனைய தளம் தான் Alexa.com இந்த இணைய தளத்தை பற்றி சில முக்கிய தகவல்களை இன்று தெரிந்து கொள்வோம்.

                                                    
 ஒரு இணையத்தின் அலெக்ஸா தரவரிசை என்பது குறிப்பிட்ட இணையதளத்திற்கு உள்ள வாசகர்களின் (visitors) எண்ணிக்கையை பொருத்தே அமைக்கிறது. அதிகமான வாசகர்கள் (visitors) கொண்ட இணையதளம் தான் முதலிடத்தில் இருக்கும். அதன் படி உலகின் முன்னனி தேடுதல் பொறியான கூகிள் தான் இந்த அலெக்ஸா தரவரிசையில் இன்றைய நிலைப்படி முதலிடத்தில் உள்ளது. சிறுது வருடங்களுக்கு முன்னாள் யாகூ (yahoo)தான் முதலிடத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இணையத்தின் அலெக்ஸா தரவரிசை என்பது பார்க்கும் நாளிலிருந்து கடைசி மூன்று மாதங்களின் அடிப்படையில் அமைக்கிறது. மேலும் ஒரு மாதத்திற்கான அலெக்ஸா தரம், 7 நாட்களுக்கான அலெக்ஸா தரம், 1 நாளுக்கான அலெக்ஸா தரம் என்பவை குறிப்பிட்ட இணையதளத்தின் தரத்தை பொருத்து பார்க்க இயலும். மேலும் அலெக்ஸா ரெங்க்கில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் முதல் 100 இணையங்களை கூட பார்க்க இயலும். இந்தியாவின் முதல் 100 இணையதளங்களை காண, இங்கே கிளிக் செய்யவும்

அலெக்ஸா இணையதளம் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் உலகளவிய தெரிந்திருத்தல் (Reach), தளத்தின் பக்கங்கள் பார்க்கபட்ட விதம் (pageviews), ஒரு வாசகர் பார்த்த மொத்த பக்கங்களின் விதம் (pageviews/user) போன்ற விவரங்களையும் தருகிறது.

அலெக்ஸா ரெங்க் எப்படி வேலை செய்கிறது.?

இந்த அலெக்ஸா ரெங்க் எப்படி வேலை செய்கிறது. என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?. அலெக்ஸா டூல்பார் (toolbar) என்ற ஒன்றை அலெக்ஸா நிறுவனம் தருகிறது. மேலும் மேலோடிகளை (Browsers) பொருத்து அதற்க்கு தகுந்த Add-ons வெளியிட பட்டுள்ளது. இந்த டூல்பார் மற்றும் Add-ons பயன்படுத்துபவர்கள் பார்க்கும் விவரங்களை வைத்துதான் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு அலெக்ஸா ரெங்க் கணிக்கப்படுகிறது. எனவே அலெக்ஸா ரெங்க் என்பது மிக சரியான இணைய தரவரிசை பட்டியல் என்று கூற முடியாவிட்டாலும் இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் இதுவே ஒரே வாய்ப்பாக கருதப்படுகிறது. அலெக்ஸா ரெங்க் போல் வேறு சில தரபட்டியல்கள் இருப்பினும் அவை அலெக்ஸா அளவிற்க்கு கூட சரியான பட்டியலை தருவதில்லை என்பது கூடுதல் தகவல்.

அலெக்ஸா ரெங்க்கில் anbuthil.com
Alexa Certified Traffic Ranking for anbuthil.com
Alexa ரேங்க் எப்படி வேலை செய்கிறது? Alexa ரேங்க் எப்படி வேலை செய்கிறது? Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5