அசைக்க முடியாத இடத்தில் விண்டோஸ் கணினிகள்


புதிய கம்ப்யூட்டர் வாங்கப் போகிறீர்களா? உங்களை ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கலாமே? என்று ஒரு சிலர் அறிவுரை கூறலாம் (அறிவுரை கூறுபவர் விண்டோஸ் பயன்படுத்தி வருகிறார் என்பது வேறு விஷயம்). சிலர் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துங்கள். அதில் நிறைய பாதுகாப்பு வசதிகள் உண்டு எனக் கூறலாம். ஆனால், நீங்கள் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்றால், 96% மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவது தான் நல்லது.
                         
                                             
உலகில் இயங்கும் 10 கம்ப்யூட்டர்களில் 8 கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மை. பாதிக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 சிஸ்டமும், மீதம் உள்ளவற்றில் பாதியில் எக்ஸ்பி சிஸ்டமும் இயங்குகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக விண்டோஸ் பயன்படுத்திக் கொண்டு வருகிறீர்கள். இதில் இயங்கும் உங்களுக்கு வசதியான சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறீர்கள்.

 வெளியில் இணைத்து இயக்கும் பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்றவற்றைக் கூடப் பல ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்துடன் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தினுடையதையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறீர்கள். 


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மாற்றம் வேண்டும் எனத் திட்டமிட்டாலும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மட்டுமே மாற்றிக் கொள்கிறீர்கள். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ்8க்கு மாறிக் கொண்டு பயன்படுத்துவதில் திருப்தி அடைகிறீர்கள். இவை கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் இப்போது ரூ.30,000க்குள் கிடைக்கிறது. விண்டோஸ் சில சாப்ட்வேர் புரோகிராம்களுடன் கிடைக்கிறது. 

அவை போதும் என்று, உங்கள் பணியைத் தொடர்கிறீர்கள். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கினால், விலை சற்று குறையலாம்; ஆனால், உங்களுக்குத் தேவையான பயன்பாட்டு தொகுப்புகளுக்கு விண்டோஸ் தான் சரியான இயக்க முறைமையாக அமையும். எனவே தான், சிறிய விலை வேறுபாட்டினைப் பொருட்படுத்தாமல், விண்டோஸ் இயக்கத்திற்கே செல்கிறீர்கள். மேலும், லினக்ஸ் பயன்பாடு வேண்டும் என்றால், விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரிலேயே, லினக்ஸ் சிஸ்டத்தினையும் பதிந்து இரட்டை இயக்கமாகக் கொள்ளலாம்.
அசைக்க முடியாத இடத்தில் விண்டோஸ் கணினிகள் அசைக்க முடியாத இடத்தில் விண்டோஸ் கணினிகள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5