தமிழ் படங்களை HD தரத்தில் பார்க்க புதிய இணையதளம்

இன்றைய நவநாகரீக உலகில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வெகமாக செல்கிறது. தியேட்டரில் போய் படம் பார்த்த காலம் போய் இப்போது செல்போனிலேயே படங்களை பார்க்கும் காலமாகிவிட்டது. தற்போது சினிமாவில் இருப்பவர்களை தங்களது படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் டிடிஎச்., போன்றவற்றில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போது தமிழ்படங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பார்க்க பிரத்யேமாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
                                  Arima Nambi

ஹீரோடாக்கீஸ் எனும் பெயரில் உருவாகியுள்ள இந்த இணையதளம் தமிழ் மக்களுக்கான பொழுதுப்போக்கில் ஒரு புதிய பரிமாணத்தை தர உள்ளது. உலகில் எங்கு இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந் இணையதளத்தில் உள்ள படங்களை உயர் தரத்தில் கண்டு மகிழலாம். மக்களின் ரசனைக்கேற்ப பல வகையான படங்களை ஹீரோடாக்கீஸ் வழங்கியுள்ளது. உதாரணமாக ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் ரொமான்ஸ் என பல வகை சினிமாக்களை இந்த இணையதளத்தில் பார்க்கலாம். இந்த இணையதளத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் துவக்கி வைத்தனர்.


இதுகுறித்து கே.பாலசந்தர் கூறுகையில், "தொழில்நுட்பம் இந்த உலகத்தை சுருக்கி விட்டது, மேலும் பல வியாபார மாற்றங்களை உண்டாக்கி கொண்டிருக்கிறது. சினிமா துறையும் அதன் பலன்களை அனுபவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ஹீரோடக்கீஸ் தமிழ் திரைப்பட இயகுனர்களுக்கும், தயாரிப்பளர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களை சென்றடைய உதவும். இது தமிழ்திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய ஊகத்தை தரும் என்றார்.


தாணு கூறியதாவது, “ஹீரோடாக்கீஸ், தன்னம்பிக்கையும், தொழில்நுட்பத்திலும் ஆர்வமிக்க இளைஞர்களால் தொடங்கப்பட்டது. அதை விட சினிமாவின் மேல் அதித காதலும் அக்கறையும் கொண்டவர்கள். திருட்டு விசிடிக்கு எதிராக யார் போராடினாலும் அவர்களுக்கு திரையுலகம் அதரவு அளிக்கவேண்டும். இந்த முயற்சி சிறு பட தயாரிப்பாளர்களுக்கு புதிய ஊக்கத்தையும், அவர்களின் படத்தை உலகின் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.


ஹீரோடாக்கீஸின் முதல் வெளியீடாக, சில வாரங்களுக்கு முன்பு தாணு அவர்கள் தயாரித்து, ஆனந்த் சங்கரின் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “அரிமா நம்பி” படத்தை வெளியீட்டுள்ளனர். இப்படத்தை உலகெங்கிலும் ஹீரோடாக்கிஸ் முலமாக காணலாம்.


இணையதள முகவரி : www.herotalkies.com
தமிழ் படங்களை HD தரத்தில் பார்க்க புதிய இணையதளம் தமிழ் படங்களை HD  தரத்தில் பார்க்க புதிய  இணையதளம் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5