மொபைலுக்கு இலவசமாக Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.

நாம் பலரும் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. cricket நடைபெறும் காலங்களில் அதனைப் பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

இதற்கு முதலில் www.twitter.com இல் சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள். இல்லாதவர்கள் புதிதாக ஒரு கணக்கைத் திறந்துகொள்ளுங்கள்.

இப்போ  Settings இனுள் செல்லவும்.

இதிலே Mobile என்பதைத் தெரிவுசெய்யவும்.

 இப்போ வலப்பக்கத்திலே உள்ளவாறு நாட்டினைத் தெரிவுசெய்து கீழ் உள்ளதை பூரணப்படுத்தியபின் “ Activate Phone “ ஐ அழுத்தவும். பின்னர் தேவையான Settings ஐ செய்யவும்.


இப்போ  Search என்ற இடத்தில்  LiveCricInfo என்று Type செய்யவும். 


இதிலே வலது பக்க மேல் மூலையில் உள்ள Follow என்பதை கிளிக் செய்யவும். இப்போ அதுFollowing என்றவாறு மாறியிருக்கும்.


இப்போ வலது பக்க முக்கோணியை கிளிக்பண்ணி அதிலே “Turn on mobile notifications” என்பதை தெரிவுசெய்யவும்.


அவ்வளவுந்தான் இனிமேல் உங்களுக்கு கிரிக்கட்டின் உடனடிச் செய்திகள் உங்கள் தொலைபேசிக்கு உடனுக்குடன் வரும். இதுபோலவே உங்களுக்கு விரும்பியவற்றை Follow பண்ணி மேலுள்ளது போல் தொடரவேண்டியதுதான்...
மொபைலுக்கு இலவசமாக Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள. மொபைலுக்கு இலவசமாக  Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள. Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5