ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி?

நம் blogger Template-ல் SideBar-ஐ வைத்திருப்போம் அது சிலபேருக்கு இடது பக்கத்தில் இருக்கும் சில பேருக்கு வலது பக்கத்தில் இருக்கும்.சிலருக்கு இரண்டு பக்கத்திலும் இருக்கும்இந்த பதிவில் நாம் பார்க்க போவது இடது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ வலது பக்கத்திலும் வலது பக்கத்தில் இருக்கும் SideBar-ஐ இடது பக்கத்திலும் கொண்டுவருவது எப்படி என்று பார்க்க போகிறோம்.
                                  
                                   
         
செய்முறை:

உங்கள்  ப்ளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்

Template என்பதை க்ளிக் செய்யவும்

backup/restore என்பதை க்ளிக் செய்யவும்

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

அடுத்து Edit HTML ஐ க்ளிக் செய்யவும்
(CTRL+F)அழுத்தி #main-wrapper எனும் Code-ஐ தேடி கண்டுபிடிக்கவும்.

#main-wrapper-க்கு கீழே float: left அல்லது right என்று இருக்கும் left என்றிருந்தால் right எனவும் right என்றிருந்தால் left எனவும் மாற்றி கொள்ளவும்

பிறகு #sidebar-wrapper எனும் Code-ஐ தேடி கண்டுபிடிக்கவும்

#sidebar-wrapper-க்கு கீழே float: left அல்லது right என்று இருக்கும் left என்றிருந்தால் right எனவும் right என்றிருந்தால் left எனவும் மாற்றி கொள்ளவும்.
ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி? ப்ளாக்கரில் SideBar-ஐ இடமாற்றம் செய்வய்து எப்படி? Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5