குழந்தைகளின் அறிவைவளர்க்கும் பயனுள்ள இலவச மென்பொருள்

நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே 47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள் வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான் சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.



அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக இன்றே  வழங்கி மகிழ் செய்யுங்கள்.தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது.





இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.


முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது. Installationமுடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.





இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.








இதேபோல ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.








இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.








இனி உங்கள் குழந்தைகளின் உற்ச்சாகத்தைப் பாருங்கள்.


                                                                 DOWNLOAD
குழந்தைகளின் அறிவைவளர்க்கும் பயனுள்ள இலவச மென்பொருள் குழந்தைகளின் அறிவைவளர்க்கும்  பயனுள்ள இலவச மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5