பாடம் 5 -Share பட்டனை உங்கள் பதிவில் இணைக்க.

உங்கள் பதிவுக்கு வரும் வாசகர்கள், படித்தது பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிர வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் மேலும் நிறைய வாசகர்கள் நம் பதிவுக்கு வருவார்கள். இதற்கு உதவும் வகையில் சமூக வலைத்தளங்களின் சுட்டியை நமது வலைப்பதிவில் கொடுக்கலாம். ஆனால் நிறைய வலைத்தளங்கள் உள்ளதால் அது சற்று கடினம். இதற்கு உதவுகிறது Share button. அதை எப்படி இணைப்பது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.



முதலில் http://www.addthis.com என்ற தளத்திற்குச் செல்லுங்கள்.


அங்கு கீழே இடது ஓரத்தில் Select your style என்பதன் கீழ் நான்கு விதமான பட்டன்கள் இருக்கும். அதில் உங்களுக்குத் தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.







இந்தத் தளமே நமது வலைப்பக்கத்தை ஆராய்ந்து வாரம் ஒருமுறை அறிக்கை தரும் வசதியும் கொண்டுள்ளது. இந்த வசதி வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை Do you want analytics? என்பதன் கீழ் நீங்கள் தேர்வு செய்துகொள்ளாலாம்.







இந்த வசதியை மற்ற தளங்களான google, blogger போன்றவையே தருவதால் என்னைப் பொருத்தவரை இந்த வசதியை இந்தத் தளத்தில் இருந்து பயன்படுத்தவேண்டாம் என நினைக்கிறேன்.



அடுத்து Get your code என்பதை அழுத்துங்கள். நீங்கள் analytics வேண்டும் என கேட்டிருந்தால் உங்களை இந்தத தளத்தில் இணையச் சொல்லும். இல்லையெனில் நேரடியாக codingதோன்றும். அதை நீங்கள் copy செய்து
கொள்ளுங்கள்.





அடுத்து


DASHBOARD~
DESIGN~
ADD A GADGET~
HTML/JAVASCRIPT



என்ற இடத்திற்கு சென்று அந்த கோடிங்கை paste செய்து, save செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான். உங்கள் பதிவைப் பற்றி இப்போது வாசகர்கள் மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துவதற்கான Share button தோன்றும்.


இதன் பயன்கள்:

இதை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வலைப்பக்கத்தின் trafficஐ பெருக்கலாம்.
300 க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களில், 50க்கும் மேற்பட்ட மொழிகளில் வாசகர்கள் உங்கள் வலைப்பதிவைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.
இதுவரை ஒன்றரை மில்லியன் வலைப்பக்கங்களில் இந்த பட்டன் பயன்படுத்துகின்றன.
உங்கள் வலைப்பதிவின் நிலமையைப் பற்றி இந்தத் தளத்தின் analytics மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பாடம் 5 -Share பட்டனை உங்கள் பதிவில் இணைக்க. பாடம் 5 -Share பட்டனை உங்கள் பதிவில் இணைக்க. Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5