உங்கள் வலைப்பதிவுக்கு டெம்ப்ளேட் மாத்த சில சிறந்த தளங்கள் மற்றும் வழிமுறைகள் ,,,, - அன்பைதேடி அன்பு,,,

உங்கள் வலைப்பதிவுக்கு டெம்ப்ளேட் மாத்த சில சிறந்த தளங்கள் மற்றும் வழிமுறைகள் ,,,,

நாம் வலைப்பதிவை உருவாக்கும் சமயத்தில் நமது வலைப்பதிவிற்காக ஒரு டெம்ப்ளேட்டை தேர்ந்தெடுத்திருப்போம். அது நமக்கு பிடிக்காததாக கூட இருக்கலாம். அப்படி நாம் வேறு வழியின்றி தேர்வு செய்த டெம்ப்ளேட்டை இந்தப் பாடத்தில் எப்படி மாத்துவது என்பது பற்றி பார்க்கலாம். பிளாக்கர் தளத்தில் சில டெம்ப்ளேட்டுகளே இருப்பதால் நாம் நமக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை வேறு ஒரு தளத்தில் இருந்து தரவிறக்கி உபயோகிக்கலாம். அல்லது பிளாக்கரில் இருக்கும் வேறு டெம்ப்ளேட்டுகளையும் உபயோகிக்கலாம். இலவசமாக டெம்ப்ளேட்டுகள் தரும் சில தளங்கள்:
http://btemplates.com/
http://www.allblogtools.com/
http://freetemplates.blogspot.com/
http://www.bietemplates.com/
http://www.deluxetemplates.net/
http://www.bloggertemplatesfree.com/


இந்தத் தளங்களில் இருந்து உங்களுக்கு தேவையான டெம்ப்ளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கினால் உங்களுக்கு ஒரு .zip கோப்போ அல்லது .xml கோப்போ சேமிக்கப்படும். .zip கோப்பாக இருந்தால் அதனுள் இருக்கும் .xml கோப்பை பிரித்து எடுக்கவும். பெரும்பாலும் இந்தத் தளங்கள் டெம்ப்ளேட்டின் பெயரிலேயே ஒரு .xml கோப்பை கொடுக்கும். மேலும் சில தளங்கள் அத்துடன் சேர்த்து சில கோப்புகளையும் கொடுக்கும்.  இதில் நமக்குத் தேவைப்படுவது xml கோப்பு மட்டுமே. அதை சேமித்துக் கொண்டபின்
  • DASHBOARD ->>
  • DESIGN  ->>
  • EDIT HTML
என்பதற்குச் செல்லுங்கள்.  அதில் தற்போது உங்கள் பதிவில் இருக்கும் டெம்ப்ளேட்டை சேமித்துக்கொள்வது நல்லது. நீங்கள் டெம்ப்ளேட்டை மாற்றிய பின்னர் ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனே பழைய டெம்ப்ளேட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.  இதற்குBACKUP/RESTORE TEMPLATE என்பதன் கீழ் உள்ள Download full templateஎன்பதை தேர்வு செய்து உங்கள் பழைய டெம்ப்ளேட்டை சேமித்துக்கொள்ளுங்கள்.பின்னர் choose file என்பதை தேர்வு செய்து உங்களுடைய புதிய டெம்ப்ளேட்டுக்கான xml கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள். தேர்வு செய்த பின் upload என்பதை தேர்வு செய்து அதை தரவேற்றினால் வேலை முடிந்தது. புதிய டெம்ப்ளேட்டில் உள்ள கோடிங்குகளில் ஏதேனும் தவறு இருந்தால் பிளாக்கர் ஏற்றுக்கொள்ளாது. எல்லாம் செய்த பின்னர் கிழே உள்ளSAVE TEMPLATE என்பதை அழுத்துங்கள். அவ்வளவுதான். இப்பொழுது உங்கள் வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தால் புதிய டெம்ப்ளேட் மாற்றப்பட்டிருக்கும்.