பேஸ்புக் / டிவிட்டர் / மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா??

நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...


பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர்.    


உதராணமாக  
http://www.anbuthil.com/ என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/4jpY4 அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக http://www.anbuthil.com/  முகவரிக்கே வந்து விடும் . 

இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . 

உதாரணமாக 
http://www.anbuthil.com/p/blog-page_26.html என்ற இந்த முகவரியைhttp://adf.ly/4jpdV இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . 




டிவிட்டர் / பேஸ் புக் மூலம் பகிர 
நீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர்கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .

உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதனை உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 cents இல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் . adf.ly தளத்தில் சேர இங்கு செல்லவும் .


இணையத் தளம் மற்றும் / வலைத்தளம் 
இது மேற்கண்ட முறையை விட மிகவும் எளிது . நீங்கள் வலைத்தளம் அல்லது இணையத் தளம் உள்ளதா ??? அப்படியாயின் இது உங்களுக்கானது . 

adsense மற்றும் ஏனைய விளம்பரத் தளங்கள் போன்றே இதையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம் . ஆனால் அதனை விட இதில் சம்பாதிப்பது சுலபம் . உங்கள் தளத்தில் இருந்து வெளியே செல்லும் தொடர்புகளை ( links ) இம்முறையில் மாற்றி அமைக்கலாம் .

சுருக்கமாகச் சொல்வதானால் உங்களுக்குப் பிடித்தமான ஒரு தளத்தின் முகவரியை உங்கள் தளத்தில் இணைத்து இருக்கிறீர்கள் . உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் பலரும் அந்த லிங்கையும் பார்வையிடுவர் . இதில் உங்களுக்கு ஓர் லாபமும் இல்லை , ஆனால் அதற்குப் பதிலாக adf.ly மூலம் உங்களுக்குப் பிடித்த லிங்கை மாற்றி இணைப்பதின் மூலம் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும். .
இதன் மூலம் உங்கள் தளத்தில் இருந்து வெளிச்செல்லும் அனைத்து லிங்க் மூலமாகவும் உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கும்
                                                                                                               .
பேஸ்புக் / டிவிட்டர் / மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா?? பேஸ்புக் / டிவிட்டர் / மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா?? Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5