விளையாடலாம் வாங்க – பாம்பும் பூதமும் விளையாட்டு.

பாம்புகள் என்றால் படையும் நடுங்கும். ஆனால் கணிணியில் பாம்புகளைப் பயன்படுத்தி பல விளையாட்டுகளும் இருக்கின்றன. AxySnake விளையாட்டில் பாம்பை நகர்த்திச் சென்று ஆப்பிள்களைச் சாப்பிட வேண்டும். ஆப்பிளைச் சாப்பிட சாப்பிட பாம்பின் எடையும் நீளமும் அதிகரித்துக் கொண்டே வரும்.


பாம்பின் தலைப்பகுதி அதன் உடலின் வேறு எங்கும் பட்டுவிட்டால் பாம்பின் நீளம் குறைந்து விடும். குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள்களைச் சாப்பிட்டு விட்டு அடுத்த லெவலுக்கான வழியில் சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் அங்கங்கே ஒளிந்திருக்கும் பூதங்கள் பாம்பைக் கொன்று விடும்.

விளையாட சுவாரசியமான இந்த விளையாட்டில் 5,15,20 எண்ணிக்கையில் அமைந்த லெவல்கள் உள்ளன. உங்களுக்கு ஏற்ற கடின அளவுக்கு ஏற்ப லெவல்களை அமைத்துக் கொள்ளலாம். முதலில் பிடித்த கலரில் உள்ள பாம்பை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.


ஒவ்வொரு நிலையிலும் விளையாடும் இடம் (Game background) வித்தியாசமாக அமைக்கப்  பட்டிருக்கும். ஆப்பிள்களுடன் இடைஇடையே கற்களும் இருக்கும். அவைகளைச் சாப்பிட்டு விட்டால் ஆட்டத்திற்கான புள்ளிகள் குறைந்து விடும். திரும்பவும் ஆப்பிள்களைச் சாப்பிட்டால் தான் சக்தி கிடைக்கும்.



பழங்களைச் சாப்பிட்டு குறிப்பிட்ட நீளம் வந்தவுடன் ஒரு சாவியை விமானத்தில் கொண்டு  வந்து போடுவார்கள். அதைச் சாப்பிட்டவுடன் அடுத்த லெவலுக்கான வழி
திறக்கப்படும்.




குறிப்பிட்ட நேரத்தில் செல்லாவிட்டால் பாம்பை பூதம் கொன்று தின்று விடும். அதே போல இருட்டான இடங்களில் சென்றாலும் ஒளிந்திருக்கும் பூதங்கள்
பிடித்துக்கொள்ளும். இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது எனக்காட்ட கடிகாரம்
வலது புறத்தில் இருக்கும்.

இந்த விளையாட்டை நிறுவி முதல் முறை விளையாடும் போது Register கொடுக்கவும். இதற்கான பெயரும் ரெஜிஸ்டர் எண்ணும் தரவிறக்கிய போல்டரிலேயே Registration என்ற கோப்பில் உள்ளது.


தரவிறக்கச்சுட்டி:    INGEE
விளையாடலாம் வாங்க – பாம்பும் பூதமும் விளையாட்டு. விளையாடலாம் வாங்க – பாம்பும் பூதமும் விளையாட்டு. Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5