வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே உஷார்...

வாட்ஸ்ஆப் மூலம் தனி நபர் பற்றிய வங்கிக் கணக்கு எண், இமெயில் முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்களை சேகரித்து, அதனை பயன்படுத்தி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.இது குறித்த எச்சரிக்கையை தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து வருவது போன்று உங்களுக்கு ஒரு "லின்க் (link)" அனுப்பப்படும். அதனுள் சென்றால், உங்களுக்கு அந்த சலுகை தரப்படும், இந்த சலுகை கிடைக்கும் என ஆசை காட்டி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் கேட்பார்கள்.

போலி இணையதளங்களை பயன்படுத்தி, உங்கள் போனில் மார்வேர் மென்பொருள் மூலம் ஊடுருவி, உங்களைப் பற்றிய தகவல்களை வைத்து மோசடி செய்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் அதிகம். உலகம் முழுவதிலும் சுமார் பல நுாறு கோடி பேர் வாட்ஸ்ஆப்., பயன்படுத்துகிறார்கள். அதிகரித்து வரும் வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களை குறிவைத்தே இந்த மோசடி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சில சமயம், பல்வேறு மொழிகளில் வாடிக்கையாளர்களிடம் பேசியும் அவர்களை கவர்ந்து, அவர்களைப் பற்றிய தகவல்கள் பெறப்படுகின்றனவாம். அல்லது, ஏதாவது ஒரு தகவலை அனுப்பி, அதனை 10 நபர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது சலுகை கிடைக்கும் எனவும் பயன்பாட்டாளர்களை சூழ்ச்சி வலையில் சிக்கி வைக்கிறார்களாம்.


தற்போது மொபைல் போன்கள் மூலம் வங்கி கணக்கு அப்ளிகேஷன்களை இயக்கும் வசதி வந்து விட்டதால், வாட்ஸ்ஆப் மோசடி நபர்கள் எளிதில் உங்கள் மொபைல் போனிற்குள் ஊடுரு, உங்கள் வங்கி கணக்கில் மோசடி செய்யும் வாய்ப்பு அதிகம் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.நன்றி தினமலர்.
Continue Reading →

ரூ.999க்கு யுஃபிட்னஸ் பேன்டு விற்பனைக்கு வருகின்றது..!

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் யுஃபிட் பிட்னஸ் ட்ராக்கர் கருவியை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை மாதம் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கருவியின் விலை ரூ.999 என்றும் இந்த கருவி அமேசான் தளத்தில் மட்டும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

யுஃபிட் கருவியை வாங்குவதற்கான முன்பதிவுகள் இம்மாதம் 21 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு முன்பதிவு செய்யும் முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஹெல்திஃபை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இதற்கான கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.1,800 முதல் துவங்கி ஆண்டுக்கு ரூ.10,000 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

 யுஃபிட் கருவியில் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, நடக்கும் தூரத்தை ட்ராக் செய்வது, தூக்கத்தை ட்ராக் செய்வது மட்டுமில்லாமல், இன்கமிங் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் குறித்த நோட்டிபிகேஷன்கள் வழங்கப்படுவதோடு யுஃபிட் செயலியுடன் இணைந்து வேலை செய்யும். 

இந்த செயலி ஹெல்திஃபைமீ சேவையுடன் இணைந்து பேன்டு கருவியில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஏற்ப பரிந்துரைகளை வழங்கும் இந்திய உணவுகளில் இருக்கும் கலோரிகளை கணக்கிடும் முதல் கருவி இது என்பதோடு உங்களது உடல் எடை குறித்த தகவல்களையும், உடற்பயிற்சி சார்ந்த குறிப்புகள் மற்றும் பல குறிப்புகளை வழங்கும்.
Continue Reading →

புதிய மைல்கல்லை எட்டியது கூகுளின் ஜிமெயில் சேவை

இணைய உலகின் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் மின்னஞ்சல் சேவை ஜிமெயில் ஆகும்.இம் மின்னஞ்சல் சேவையே இன்று உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இச் சேவையையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1 பில்லியனிலும் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த எண்ணிக்கை நாளாந்தமா அல்லது மாதாந்தமா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த ஜிமெயில் சேவை 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறுகிய காலத்தில் ஏனைய மின்னஞ்சல் சேவைகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளதுடன், இம் மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியே அன்ரோயிட் மொபைல் இயங்குதளம், யூடியூப், கூகுள் மேப் போன்ற அப்பிளிக்கேஷன்கள் கையாளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

இனி 100ல் இருந்து 256.. வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி்

வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 100ல் இருந்து 256ஆக உயர்த்தப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.தங்களில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதற்காக பலரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஆண்டு சந்தா இல்லாமல் வாட்ஸ் அப்பை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது அடுத்த இன்ப அதிர்ச்சியாக வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த புதிய வசதி தற்போது சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது.

ஆன்ட்ராய்டு செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Continue Reading →

FACEBOOK

Please wait..7 Seconds Cancel
Recommend us Google!